மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நீ வேற லெவல் பியூட்டிமா.! கொள்ளை அழகில் சொக்க வைத்த புன்னகை இளவரசி!! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. அவரை ரசிகர்கள் செல்லமாக புன்னகை இளவரசி என அழைத்தனர். கமல், விஜய், அஜித், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ள நடிகை சினேகா பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த நட்சத்திர தம்பதிகளுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற அழகிய மகளும் உள்ளனர். இந்நிலையில் இடையில் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பல படங்களில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சினேகா மற்றும் பிரசன்னா அவ்வப்போது தங்களது குடும்ப புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது அவர் புடவையில் கொள்ளை அழகில் கியூட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.