மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. அம்மா மாதிரியே செம கியூட்! நடிகை சினேகாவின் மகனும், மகளும் எப்படி வளர்ந்துட்டாங்க பார்த்தீர்களா!! வைரல் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம்வந்தவர் நடிகை சினேகா. இவரது வசீகரமான அழகுக்கும், புன்னகைக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
சினிமாவில் பயங்கர பிசியாக நடித்துவந்த அவர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தற்போது பல பிரபலங்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சினேகா. தற்போது நடிகை சினேகா - பிரசன்னா தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று சர்வதேச சகோதரர் தினம் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு சினேகா தனது சகோதரருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தனது மகள் அவரது அண்ணனுக்கு வாழ்த்து கூறுமாறும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் நடிகை சினேகாவின் மகளும், மகனும் நல்லா வளந்துட்டாங்களே என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.