மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. கொள்ளை அழகில் கொல்றாரே.! யங் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் சினேகா.! வைரலாகும் புகைப்படங்கள்!!
என்னவளே என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை சினேகா. புன்னகை இளவரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் அஜித், கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி ஸ்டார்களுடன் இணைந்து எக்கசக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சினேகா நடிகர் பிரசன்னாவை அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது காதலித்து கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த சினேகா தற்போது ரீ என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் அவ்வப்போது விதவிதமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது கொள்ளை அழகில் செம கியூட்டாக புன்னகைத்தவாறே போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.