திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
13 வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை! யார் தெரியுமா?
கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்டம் புதுப்பேட்டை. அடிதடி, வெட்டுக்குத்து என பயங்கர கேங்ஸ்டர் படமாக பட்டையை கிளப்பியது புதுப்பேட்டை திரைப்படம். காதல், காமெடி என நடித்து கொண்டிருந்த தனுஷை ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது புதுப்பேட்டை திரைப்படம்.
படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருந்தார். இந்த படத்தில் சினேகா கதாபாத்திரத்திற்கு அப்போவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. அதன்பின்னர் விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார் சினேகா.
தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் தனுஷ் அடுத்ததாக இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள படத்தில் தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அப்பா, மகன் கதை என கூறப்படுகிறது.
அதில், அப்பா தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம் சினேகா. புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் தனுஷிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் சினேகா.