ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காதலிக்கும்போது முதல்முறையாக டேட்டிங் சென்ற போட்டோவை வெளியிட்ட நடிகர் பிரசன்னா....! அழகிய புகைப்படம் இதோ....
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், கமல், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. சிரிப்பழகி என அனைவராலும் அழைக்கப்பட்ட சினேகாவிற்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை சினேகா பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த அழகிய ஜோடிக்கு தற்போது விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இந்த அழகிய ஜோடிகள் அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தாங்கள் காதலிக்கும்போது முதல்முறையாக டேட்டிங் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் நடிகர் பிரசன்னா. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.