திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அதுக்கு வர நேரமில்லை, ஐபிஎல் கேக்குதோ".? நயன் விக்கியை வருத்தெடுத்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாரா தவிர விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. பொதுவாகவே சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பெரும்பளவில் போட்டிகளை நேரில் கண்ட ரசிக்கின்றனர். இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளிலும் திரிஷா ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகைகள் கலந்து கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றைய போட்டியை காண இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷ் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் வருகை புரிந்திருந்தனர். அவர்கள் போட்டியின் போது உற்சாகமாக விசில் அடித்து சிஎஸ்கே அணிக்கு தங்கள் ஆதரவு தெரிவித்ததை அந்த அணியின் ட்விட்டர் பக்கம் புகைப்படமாக வெளியிட்டு இருந்தது.
இந்த புகைப்படம் இணையதள வாசிகளிடம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மறைந்த திரைப்பட தயாரிப்பாளரும் நடிகரும் இயக்குனர் மனோ பாலாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இவர்கள் இருவரும் ஐபிஎல் போட்டியை காண வந்திருந்ததால் இறுதிச் சடங்கிற்கு வர நேரமில்லை ஆனால் ஐபிஎல் போட்டிகளை காண மட்டும் நேரம் இருக்கிறதா? என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.