மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேற லெவல்..உலகளவில் சூரரை போற்று படைத்த சாதனை! என்னனு பார்த்தீர்களா! செம ஹேப்பியில் சூர்யா ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்து பெருமளவில் ஹிட்டான திரைப்படம் சூரரைப்போற்று. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி சூரரைப்போற்று படம் உருவானது. மேலும் கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தநிலையில் திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி நிறுவனம் உலகளவில் அதிக ரேட்டிங் பெற்று டாப் 1000 இடத்தில் இடம்பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஷஷாங் ரிடம்ப்ஷன் என்ற திரைப்படம் 9.3 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், காட்பாதர் என்ற திரைப்படம் 9.2 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. மேலும் சூரரை போற்று திரைப்படம் 9.1 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தநிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்துடன் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.