மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூரரை போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறதா? நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் சூர்யாவுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், சூரரை போற்று படம் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் படத்தை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Vinayagar Chathurthi wishes to all!#SooraraiPottruOnPrime @PrimeVideoIN pic.twitter.com/ZdYSF52ye2
— Suriya Sivakumar (@Suriya_offl) August 22, 2020
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் நிலையில், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம். இயக்குனர் சுதா கொங்கராவின் உழைப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் என் திரைப்பயணத்தில் மிக சிறந்த படமாக இருக்கும். இந்த படத்தை திரையரங்கில் அமர்ந்து ரசிகர்களுடன் அமர்ந்து கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது. ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை.
சூரரைப் போற்று திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்து இருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களை திரையரங்குகளில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களது மனம் கவர்ந்த திரைப்படமாக கண்டிப்பாக சூரரைப்போற்று இருக்கும்.