மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி போட்டுக் கொண்ட சூரரைப்போற்று நடிகருக்கு ஒரு வாரத்திலேயே காத்திருந்த அதிர்ச்சி! செம ஷாக்கில் ரசிகர்கள்!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சில வாரங்களில், சூரரைப்போற்று பட வில்லன் நடிகர் பரேஷ் ராவல்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட் கொடுத்த சூரரைப்போற்று படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் பரேஷ் ராவல். 65 வயது நிறைந்த இவர் சமீபத்தில் மும்பையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மேலும் அப்பொழுது அத்தகைய புகைப்படங்களை வெளியிட்டு அவர் மருத்துவர்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் பரேஷ் ராவல்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் பரேஷ் ராவல் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் பத்து நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.