மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியளவில் சூர்யாவின் சூரரைப்போற்று படைத்த சாதனை! உச்சகட்ட மகிழ்ச்சியில் கொண்டாடும் ரசிகர்கள்!
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சூரரை போற்று திரைப்படம் கடந்த நவம்பர் 12ம் தேதி OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இதுவரை படத்தை 110 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது டுவிட்டர் இந்தியா இந்த வருடத்தின் சில கணக்கெடுப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2020 ல் அதிகமாக பதிவிடப்பட்டதில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் குறித்த #sooraaipottru என்ற ஹேஷ்டாக் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மேலும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கின் #Dilbachara ஹேஷ்டாக் முதலிடத்தையும், மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த #Sarileruneekevvaru ஹேஷ்டாக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.