ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
HBD சிவகார்த்திகேயன்.. சிவகார்த்திகேயனுக்கு பிரபல நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்... வைரல் புகைப்படம்.!
ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, எந்த திரைப்பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும்.
மேலும் பல முன்னணி நடிகர்களுக்கும் இணையாக இவரும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அதேபோல் பலரும் இவரது படங்களை குடும்பத்துடன் சென்று திரையரங்குகளில் பார்ப்பது வழக்கம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றதுடன் 100 கோடி வசூல் சாதனையும் படைத்துள்ளது.
என் அன்பு தம்பி செல்ல தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்❤️❤️@Siva_Kartikeyan pic.twitter.com/vVEvktAAf5
— Actor Soori (@sooriofficial) February 17, 2022
இந்நிலையில் இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் பிரபல காமெடியனான சூரி, சிவகார்த்திகேயனுக்காக சர்ப்ரைஸ் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். தற்போது அப்புகைப்படங்களை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.