திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூரியின் கருடன் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்? இது தான் காரணமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர் சூரி. இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சூரி ஹீரோவாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அதன்படி, நடிகர் சூரி தற்போது விடுதலை 2, கொட்டுக்காளி, கருடன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கருடன் திரைப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருடன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படத்தின் டிஜிட்டல் வியாபாரம் இன்னும் முடியாத காரணத்தால் ரிலீஸ் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு காரணம் இந்த படத்தை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திய டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம், ஜியோவோடு இணைய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால் டிஜிட்டல் வியாபாரம் முடிய தாமதமாகும் என கூறப்படுகிறது.