மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த மனசுதான் கடவுள்! நடிகர் சூரிக்கு குவியும் வாழ்த்துக்கள்!! எதனால் தெரியுமா??
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சூரி.
இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும் அவர் மதுரை பகுதிகளில் பல உணவகங்களை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சூரி தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் புதியதாக அம்மன் உணவகத்தை தொடங்கியுள்ளார். அதனை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்துள்ளார். அப்பொழுது பேசிய அவர்,ஏற்கெனவே துயரத்துடன், உடல் ரீதியான பல பிரச்சனைகளோடு இங்கு வருபவர்களுக்கு குறைவான விலையில் தரமான உணவை தர வேண்டும் என யோசித்த சிறந்த நபருக்கு டெண்டர் வழங்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
சூரியன் உணவகத்தில் அனைத்து வகையான உணவுகளும் வெறும் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. லாபம் ஈட்டுவதற்காக தொழில் செய்யாமல் ஏழை மக்களின் பசியை போக்கி, குறைவான விலையில் தரமான உணவை வழங்கும் நல்ல நோக்கத்திற்காக சூரி துவங்கியுள்ள அம்மன் உணவகத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.