திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாத்ரூமில் மகனுடன் சூரி பட்ட பெரும்பாடு! கையெடுத்து கும்பிட்டு விடுத்த கோரிக்கை! வைரலாகும் வீடியோ!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிதீவிரமாக பரவி வருகின்றது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால், பிரபலங்கள் பலரும் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் தங்களது வீடியோக்களையும் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சூரி, தனது குழந்தைகளுடன் சேர்ந்து சமையல் செய்யும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து தற்போது சூரி தனது மகனை குளிக்கவைக்க படும் பாட்டையும், பாத்ரூம் கழுவுவதற்கு மனைவியிடம் திட்டி வாங்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் இறுதியில் அவர் தூய்மை பணியாளர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.