53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
20 வருஷங்களுக்கு முன்பு சூரிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.! உற்சாகத்துடன் அவரே பகிர்ந்த அரிய வீடியோ இதோ..
தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சூரி. இவரது காமெடிகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது பேச்சு, உடல் அசைவுகள் என அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் விஜய், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
இவர் நடிகர் ஆவதற்கு முன்பே நினைவிருக்கும் வரை, ஜேம்ஸ்பாண்டு உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சூரி பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சூரி காமெடியில் கலக்கிய கவுண்டமணியின் கண்ணன் வருவான் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனை அவர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நான் பேசிய முதல் வசனம். நன்றி சுந்தர்சி அண்ணன். படம் கண்ணன் வருவான் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
20 years back ❤️
— Actor Soori (@sooriofficial) September 25, 2019
சினிமாவில் நான்
பேசிய முதல் வசனம்.
நன்றி கவுண்டமணி சார் 🙏
நன்றி சுந்தர்.சி அண்ணன் 🙏
படம் “கண்ணன் வருவான்” (2000) pic.twitter.com/9cjwXf4uWV