மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாயகனாக களமிறங்கும் சூரி.. விடுதலை படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியீடு.. கொண்டாடும் ரசிகர்கள்.!
தனது வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னாளில் மிகப்பெரிய காமெடி நாயகனாக உருவெடுத்தவர் நடிகர் சூரி. இவரின் நகைச்சுவைக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
நடிகர் சூரி - சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த பல படங்கள், அவர்களின் நகைச்சுவையால் அமோக வெற்றியை அடைந்தது. இவர்கள் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகவும் அமைந்தது.
சீமராஜா திரைப்படத்திற்காக சூரி தனது உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக்குடன் திரையில் ரசிகர்களுக்கு காட்சியளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.