மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த சர்ச்சை.. "வீடு துடைக்கும் மாப் குச்சில எதுக்கு தேசியக்கொடிய பறக்கவிட்டு இருக்கீங்க?".. சூரியின் செயலால் கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமடைந்தார்.
இதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன், போராளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ஜில்லா மற்றும் சீமராஜா போன்ற படங்களிலும் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக இவரது நடிப்பில் டான் மற்றும் விருமன் போன்ற படங்கள் வெளியாகிய நிலையில், அடுத்ததாக விடுதலை என்ற படமும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகர் சூரி தேசியக்கொடி ஏற்றி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் வீடு துடைக்கும் மாப் குச்சில எதுக்கு தேசியக்கொடிய பறக்கவிட்டு இருக்கீங்க? இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா தெரியலையா? என்று கொந்தளித்து வருகின்றனர்.