#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினிகாந்த் வீட்டில் விசேஷம்... இளையமகளுக்கு ஆண் குழந்தை; பெயர் என்ன தெரியுமா?.. கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்து கொண்டார்.
இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் ராம்குமார் என்பவரை கடந்த 2010-ல் திருமணம் செய்து, 2017-ல் விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து, 2019-ல் விசாகன் வணங்காமுடி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சங்குபாய் ராவ் ஹைகுவார்ட் என்ற இயற்பெயர் கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான கோவா திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும், கடந்த 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் நடிப்பில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான கோச்சடையான் திரைப்படத்தின் இயக்குனராகவும் பணியாற்றினார்.
இந்த நிலையில், கர்ப்பமாக இருந்த சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த ஆண் குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயரிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.