மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தென்னிந்திய நடிகர்சங்க பொதுக்கூட்டம்.. இன்றைய படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து.!
சென்னையில் உள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் வைத்து, இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இன்று காலை தொடங்கி நடைபெறும் பொதுக்கூட்டத்தில், 2022 - 2023ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கை, வரவு செலவுகண்க்கு சமர்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, பொதுக்குழு நிர்வாகிகளுடன் சங்கத்தின் எதிர்காலம் தொடர்பாக பல்வேறு உரையாடல்கள் நடக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடிகர் சங்க தலைவர் நாசரின் தலைமையில் நடைபெறுகிறது.