திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எஸ்.பி.பி குரலில் தமிழில் வெளிவந்த முதல் பாடலுக்கு கிடைத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் தனது முதல் பாடல் மற்றும் அனுபவம் குறித்த சுவாரசியமான தகவல்களை எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் பகிர்ந்துகொண்ட வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். எஸ்பிபி மரணத்திற்கு இந்திய குடியரசு தலைவர், பிரதமர், பல்வேறு சினிமா பிரபலங்கள் என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
மேலும் எஸ்பிபி அவர்களுடனான பழைய நினைவுகள் குறித்த வீடியோ, புகைப்படங்கள் ஆகிவற்றை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் தனது முதல் பாடல் மற்றும் அதற்கு கிடைத்த சம்பளம் குறித்த சுவாரசிய தகவல்களை எஸ்பிபி பகிர்ந்துகொண்டே வீடியோ காட்சி ஒன்று தற்போது வைரலாகிவருகிறது.
தான் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் பாடியபோது 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை சம்பளம் பெற்றதாகவும், தமிழில் பாடிய முதல் பாடல் வெளிவரவில்லை என்றாலும், இரண்டாவதாக சாந்தி நிலையம் என்ற படத்தில் இயற்க்கை என்னும் பாடலை பாடியதாகவும் எஸ்பிபிகூறியுள்ளார் .
மேலும் அந்த பாடலுக்கு சம்பளமாக 500 ரூபாய் காசோலை கொடுத்ததாகவும், அதனை பார்த்ததும் மகிச்சியில் தனக்கு தலை சுற்றியதாகவும் எஸ்பிபி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அந்த மகிழ்ச்சியை கொண்டாட தனது நண்பருடன் உணவகத்திற்கு சென்று குலாப்ஜாமூன், மசால் தோசை, மற்றும் டபுள் ஸ்ட்ராங் காபி சாப்பிட்டதாகவும் எஸ்பிபி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நேரத்தில் தான் பொறியியல் படிப்பு படித்து வந்ததாகவும், தனது மாத செலவிற்கு தனது தந்தை அனுப்பும் 80 ரூபாய் பணத்தை மிச்சம் செய்து, தனது தந்தையின் சுமையை 6 மாதம் குறைந்ததாகவும் எஸ்பிபி அவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.