திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எஸ்பிபி இந்த மூன்று பிரபல தமிழ் நடிகர்களுக்கு ஒரு பாட்டு கூட பாடவில்லையாம்! யார் தெரியுமா அது?
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 3 நடிகர்களுக்கு அவர் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது அந்த நடிகர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மாதம் 5ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள், மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவிற்கு இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக பெரும்பாலான நடிகர்களின் படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள்.
ஆனால் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களில் இதுவரை ஒரு பாடல் கூட எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடவில்லையாம்.
இந்த செய்தி விஷால், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.