மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விசயத்திற்கு எனக்கு வருடத்திற்கு ஒருத்தர் வேண்டும்! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீ ரெட்டி!
சினிமாவில் வாய்ப்பு கேட்டு செல்லும் பெண்களிடம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என அனைவரும் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி MeToo என்ற பெயரில் போராட்டம் நடத்தி அதன்மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்கள் மீது புகார் கூறிய இவர் தமிழ் சினிமாவையும் விட்டுவைக்கவில்லை.
தமிழ் சினிமாவின் பிரபலங்கள் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி , AR முருகதாஸ் என பல்வேறு பிரபலங்கள் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது சென்னையில் செட்டிலாகிவிட்ட இவர் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து பேசியுள்ள இவர், தன்னால் ஒருவருடன் ஒரு வருடத்திற்குமேல் உறவில் இருக்க முடியாது என்றும், வருடம் வருடம் புதிய புதிய காதல் என்னக்கு தேவை என்று அந்த பதிவில் கூறியுள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.
நடிகை ஸ்ரீ ரெட்டியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டும் இல்லாமல், சமூக வலைத்தளங்களில் வேகமாகவும் பரவி வருகிறது. மேலும் சிலர் "ஒரு வருடம் தானே, நான் ரெடி உங்களை திருமணம் செய்து கொள்ள, ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாமா? ? எனவும் கண்டபடி கேள்வி எழுப்பி வருகின்றனர்.