ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு விரைவில் திருமணம்? அவரே கொடுத்த விளக்கம்.!
தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம், நடிகையாக அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்த நிலையில், தற்போது சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டுமே பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் போலியாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனையடுத்து இதற்கு விளக்கம் அளித்த ஸ்ரீ திவ்யா தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் சினிமாவில் தான் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.