மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஸ்ரீரெட்டியின் பட்டியலில் இணைந்துள்ள அடுத்த பிரபலம்; யார் தெரியுமா?
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது என நடிகர்கள், இயக்குனர்கள் என பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு திரையுலகையே அதிர வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி .
இதனை தொடர்ந்து அவர் தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி, நடிகர் ஸ்ரீகாந்த் போன்றோர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார்.
சிலகாலமாக அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி, ராணாவும் திரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும், ராணாவின் தம்பி அபிராம் ஸ்ரீரெட்டியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இறுதியாக தெலுங்கு நடிகர் நானி மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது, ஓநாய்கள் ஜாக்கிரதை, சுவாதி கொலை வழக்கு ஆகிய படங்களின் தயாரிப்பாளர் சுப்பிரமணி மீது புகார் அளித்துள்ளார். மேலும், குடிபோதையில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக சுப்பிரமணியின் உறவினர் கோபி மீதும் சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.