திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஸ்ரீதேவியின் மகள்கள் தமிழ் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார்களா.? வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பம்..
தமிழ் சினிமாவில் 80களின் ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
தனது நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து இன்று வரை நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார் ஸ்ரீதேவி. இவரது திடீர் மரணம் தமிழ் ரசிகர்களின் மனதில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது போன்ற நிலையில், தற்போது ஸ்ரீதேவியின் மகள்களான குஷி கபூர், ஜான்வி கபூர் இருவரது புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி பரவி வரும். மேலும் இவர்கள் தற்போது பாலிவுட் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான தாவணி அணிந்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்டுள்ளனர். இப்புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் தமிழ் திரைப்படத்தில் நடிக்க போகிறீர்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.