திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள் - வைரலாகும் புகைப்படம்.
1992 ஆம் ஆண்டு நடிகர் சத்யராஜ் - குஷ்பு நடிப்பில் வெளியான ரிக்சா மாமா திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
அதன்பிறகு தேவதையை கண்டேன், பிரியமான தோழி, தித்திக்குதே போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு, கன்னட மொழி படங்களில் மட்டும் நடித்து வந்தார்.
அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் குட்டையான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.