திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உலக அளவில் வசூல் சாதனை படைக்கும் 'ஜவான்'.. இதுவரை இத்தனை கோடியா.?
ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் உலக அளவில் இதுவரை 900 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, யோகி பாபு விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ஜவான்.
இந்த திரைப்படம் வெளியான நாட்களில் இருந்தே ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்து வருகிறது.
அதன்படி ஜவான் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.907 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.1000 மோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.