மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்! செம கியூட்.. முக்கியமான நாளில் முதன்முதலாக தனது குழந்தையின் அழகிய முகத்தை காட்டிய சுஜா! புகைப்படம் இதோ!
சினிமாத்துறையில் 14 வயதில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் சுஜா வருணி . இவர் கதாநாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் அதிகமாக நடனமாடி இருக்கிறார்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்.
இந்நிலையில் சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவகுமாரும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
மேலும் அவர்களுக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆத்வைத் என்று பெயர் சூட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து சுஜா தனக்கு பிரசவம் பார்த்த மருத்துவரின் கையில் குழந்தை உள்ள புகைப்படம் மற்றும் தீபாவளியன்று வாழ்த்து கூறி அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். ஆனால் குழந்தையின் முகத்தை அவர் இதுவரை வெளியிட்டதில்லை.
இந்நிலையில் சுஜா சமீபத்தில் தனது திருமண நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது தனது குழந்தையின் முகத்தினை முதல்முதலாக ரசிகர்களுக்கு காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
THIS IS MY WORLD!!YOU ARE MY WORLD!!
— Shiva Kumarr (@Shivakumarr222) November 18, 2019
Can't believe 1year has already passed!Happy 1st Wedding Anniversary my sweetheart @sujavarunee .This anniversary is much more special with our prince "Adhvaaith"..
I'm so blessed to have you both in my world! #1stanniversary pic.twitter.com/PTN1a0MpJj