மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் சாதாரண ஆள் இல்ல, அவர்ட்ட எதுவும் வச்சுக்காதீங்க! எச்சரிக்கும் வரலக்ஷ்மி!
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ளது சர்க்கார் திரைப்படம். கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியிடப்பட்டது. இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள்தான் தற்போது ஹாட் டாபிக்.
இதைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு சர்க்கார் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. படம் முழுவதும் அரசியல் பேசப்பட்டிருப்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம். ஒருவழியாக திருட்டுக்கதை பிரச்னை சமரசமாக பேசி முடிக்கப்பட்ட நிலையில் தீபாவளிக்கு படம் வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.
வரும் தீபாவளி அதாவது இன்னும் இரண்டு நாட்களில் பிரமாட்டமாக வெளியாக உள்ளது சர்க்கார். இந்நிலையில் சர்க்கார் படத்தின் 6வது ப்ரோமோவை சன் டிவி ஒளிபரப்பியுள்ளது. அதில் நடிகை வரலஷ்மி அவன் சாதாரண ஆள் இல்ல, அவன்ட எதுவும் வச்சுக்காதீங்க என ராதாரவியிடம் எச்சரிப்பதுபோல் வீடியோ அமைந்துள்ளது. இதோ அந்த ப்ரோமோ உங்களுக்காக.