53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சன் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல முக்கிய சீரியல்! ஹீரோ வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சில சீரியல்கள் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வருகிறது. அவ்வாறு மக்களால் பெருமளவில் ரசித்து பார்க்கப்பட்ட தொடர் அக்னி நட்சத்திரம்.
2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடர் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஹீரோவான ஸ்ரீதர் கதாபாத்திரத்தில் வசந்த்குமார், மீராவாக வர்ஷினி அர்சா, அகிலா கதாபாத்திரத்தில் காயத்ரி ராஜ் மற்றும் சூர்யாவாக ராஜ்குமார் மனோகரன் ஆகியோர் நடித்து வந்தனர். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இத்தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
மேலும் இதனை உறுதி செய்யும் விதமாக இத்தொடரின் ஹீரோ வசந்தகுமாரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு அக்னி நட்சத்திரம் முடிவடைந்துவிட்டது, எனவே ஒரு மாற்றம் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.