மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டிவி சீரியல் நடிகையின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள்! பாருங்கள் புரியும்!
சைவம், பசங்க 2 , மாரி 2 , தடம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். சினிமாவையும் தாண்டி இவர் ஒரு வளர்ந்துவரும் இளம் விஞ்ஞானியும் கூட. என்னதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தாலும் கதாநாயகியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. நாயகி சீரியலில் நாயகியாக சென்னை 28 நடிகை விஜயலக்ஷ்மி நடித்தார். பிக் பாஸில் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து விஜயலக்ஷ்மி நாயகி சீரியலை விட்டு விலகினார்.
இதனால் விஜயலக்ஷ்மி இடத்தில் நடிக்க வித்யா பிரதீப் ஒப்பந்தமானார். இந்த வாய்ப்பு அவரது சினிமா வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என்றே சொல்லலாம். நாயகி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார் வித்யா.
பொதுவாக சீரியலில் குடும்ப பெண்ணாக நடிக்கும் வித்யா பிரதீப் சமீபத்தில் பயங்கர மாடர்னாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது. அந்த நடிகையா இது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.