திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்.! என்ன சுந்தர் சி இப்படி சொல்லிட்டாரே?? அதுவும் யாரை தெரியுமா??
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காபி வித் காதல். இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் ஹீரோவாக நடிக்கின்றனர். மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், சம்யுக்தா ஷண்முகம், டிடி, அருணா பால்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை நடிகை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது. இதில் திரையுலகத்தினர், படக்குழு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குனர் சுந்தர் சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான விஷயங்கள், ஹீரோ ஹீரோயின்கள் குறித்து சுவாரசியமான விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அப்பொழுது அவர் நடிகை மாளவிகா ஷர்மா குறித்து பேசுகையில், அவர் ஒரு டேமேஜ் ஹீரோயின். ஆக்ஷன் படத்துல ஹீரோவுக்கு நிறைய அடிபடும். ஆனால் ரொமாண்டிக் படத்தில் அதிகம் அடிபட்ட நடிகை மாளவிகா சர்மா.
ஒருநாள் கண்ணுல அடிபட்டிடுச்சுனு சொல்லி லீவ் போடுவாங்க. அது சரியாகி வந்தப்போ, கையெல்லாம் வீங்கிடுச்சு. பின் ஒரு பாடல் ஷூட் செய்தபோது, முட்டி வீங்கிபோய்விட்டது. படத்துல நிறைய சீன் அவங்க இல்லாமலே எடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் அவர் ஒரு நாள் இருந்தாலும் அலட்டிக் கொள்ளாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார் என கூறியுள்ளார்.