திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் சேதுபதியால் மீண்டும் ஹீரோவான சுந்தர் சி.!அரண்மனை 4 திரைப்படத்தின் புதிய அப்டேட்
தமிழ் சினிமாவில் வெளியான பேய் பட சீரியஸ்களில் முக்கியமானது அரண்மனை. 2014 ஆம் ஆண்டு அரண்மனை திரைப்படத்தின் முதல் பாகம் தொடங்கி தற்போது இத நான்காம் பாகம் படமாக்கப்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரண்மனை திரைப்படத்தில் நான்காம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது சுந்தர்.சி யே கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கோலிவுட்டில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதிக்கு மார்க்கெட் குறைவாக இருப்பதால் அவருக்கு சம்பளத்தை குறித்து பேசியிருக்கிறார் சுந்தர் சி.
அதற்கு சம்மதிக்காத விஜய் சேதுபதி படப்பிடிப்பிலிருந்து விலகி இருக்கிறார் இதனை தொடர்ந்து சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகிகளாக தமன்னா மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். சுந்தர் சியின் ஜோடியாக ராசி கண்ணாவும் தமன்னாவுக்கு ஜோடியாக சந்தோஷ் பிரதாப் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இந்தத் திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் பாலக்காட்டில் உள்ள அரண்மனையில் படமாக்கப்பட்டு வருவதாகவும் படத்தை விரைவாக முடித்து திரையிடுவதற்கு படக்குழுவினர் மும்முரமாக பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சில வருடங்களாக கதாநாயகனாக நடித்து வந்த சுந்தர் சி இனி இயக்குனராகவே கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.