மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லாக்கடவுனில் சன்னி லியோன் என்ன காரியம் செய்துள்ளார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம் உள்ளே!
பிரபல நடிகை சன்னி லியோன் இந்த லாக்டௌனில் தான் வரைந்த ஓவியம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சன்னி லியோன் என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது அவர் ஒரு ஆபாச பட நடிகை என்பது தான். ஆனால் தற்போது சன்னி லியோன் தனது கணவர் டேனியல் மற்றும் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சமூக விலகல் வேண்டும் என நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டௌனில் இருந்து வருகிறது. இதனால் அனைவரும் தங்கள் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
இவ்வாறு வீட்டிலேயே இருந்து வரும் சன்னி லியோன் சமூக விலகல் மற்றும் மக்கள் இப்போதும் இருக்கும் நிலையை வெளிப்படுத்தும் விதமாக அருமையான ஓவியம் ஒன்றை தன் கையால் வரைந்துள்ளார். 40 நாட்கள் கடின உழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த ஓவியத்தை சன்னி லியோன் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அதனுடன் அந்த ஓவியத்திற்கான விளக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். "உடைந்த கண்ணாடி" என அந்த ஓவியத்திற்கு பெயர் வைத்துள்ள அவர், மக்களின் தற்போதைய வாழ்க்கை இப்படி தான் உள்ளது. இந்த உடைந்த துண்டுகளை இணைத்து மீண்டும் ஒரு கண்ணாடியை உருவாக்க முடியும். அதேபோல் நாமும் இந்த சமயத்தில் ஒத்துழைத்தால் நிச்சயம் ஒரு நாள் மீண்டும் இணைய முடியும் என்ற கருத்தினை பதிவிட்டுள்ளார்.