திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ் படத்தில் ஹீரோயினாகும் கவர்ச்சி புயல் சன்னி லியோன்! கூட யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா? செம லக்குதான்..
உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக, இளைஞர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது நல்ல கதையுள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சன்னி லியோன் தமிழ் சினிமாவில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழில் திகில் கலந்த காமெடி திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். இப்படத்தை சிந்தனை செய் படத்தை இயக்கிய யுவன் இயக்கவுள்ளார்.
சன்னிலியோன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, வினோத் முன்னா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனராம். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது