மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னிடம் ரசிகர்கள் அதைதான் எதிர்பாக்குறாங்க.! கவர்ச்சி புயல் சன்னி லியோன் ஓபன் டாக்!!
ஆபாச படங்களில் நடித்து, ஏராளமான ரசிகர்களை பெற்று பிரபலமாக இருப்பவர் சன்னி லியோன். அவர் தமிழில் வெளிவந்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அதனை தொடர்ந்து சன்னி லியோன் தற்போது வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். அனாமிகா என்ற வெப்சீரிசிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, அனாமிகா செட்டில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஏனென்றால் எனக்கு சண்டை காட்சிகள் என்றால் மிகவும் பிடிக்கும். நிஜ வாழ்க்கையில் நான் எப்பொழுதும் சண்டை போடமாட்டேன்.
அதனால் இந்த வித்தியாசமான விஷயங்களை கற்றுக்கொள்வது சந்தோசமாக இருந்தது. விக்ரம் சாரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நான் என் ரசிகர்களை நேசிக்கிறேன், அவர்களும் என்னை ஏற்றுக்கொண்டார்கள்.
இந்நிலையில் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நான் ஆசைபடுகிறேன். எனவே நான் வித்தியாசமான விஷயங்களைச் செய்து, எனது திறமையை நிரூபிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.