மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகளுடன் மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பிய அர்ச்சனா! அட.. இவரும் இருக்காரா.! வைரலாகும் வீடியோ!!
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக இருந்தவர் அர்ச்சனா. சன் டிவியின் மூலம் ஆங்கராக களமிறங்கிய அவர் பல ஷோக்களை தொகுத்து வழங்கி பிரபலமாக இருந்தார். இடையில் சில காலம் இடைவெளி விட்டிருந்த அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் மகளுடன் இணைந்து சூப்பர் மாம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்தார்.
பின் அவர் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடையே ரீச்சானார். அதனை தொடர்ந்து அர்ச்சனா விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார். அதாவது அர்ச்சனா மீண்டும் தனது மகள் சாராவுடன் இணைந்து சூப்பர் மாம் சீசன் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இதில் நடுவராக குஷ்புவும் கலந்து கொள்ளவுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.