#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
அட .. சூப்பர் சிங்கரில் அனைவரையும் அசர வைத்த ஆதித்யா கிருஷ்ணன் இந்த பிரபல நடிகையின் மகனா!! வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான ஏராளமானோர் தற்போது சினிமா துறையில் பாடகர்களாக உள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவ்வாறு சூப்பர் சிங்கர் சீனியர், ஜூனியர் என மாறிமாறி நடைபெற்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகவும் கோலாகலமாக துவங்கியது.
இதில் ஏராளமானோர் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது பாடல் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இந்த சீசனில் போட்டியாளராக பங்குபெற்று முதல் பாடலிலேயே மிகவும் நன்றாக பாடி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தவர் ஆதித்யா கிருஷ்ணன். இவர் பாடுவது மட்டுமின்றி கிட்டார் வாசிக்கும் திறமை கொண்டவர்.
அதுமட்டுமின்றி அவர் கமலின் உனக்கென்ன மேலே நின்றாய் என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடி ஆல்பம் வெளியிட்டு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றார். இவர் வேறு யாருமல்ல . சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகை மீரா கிருஷ்ணனின் மகனாவார். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.