திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷிற்கு மீண்டும் இப்படி ஒரு லக்! என்ன விஷயம் தெரியுமா?
விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். அந்த வகையில் சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட பாடல் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த நாட்டுப்புற பாடகர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி.
கணவன் மனைவியான இவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களை கவர்ந்தனர். இதன் பரிசாக சூப்பர் சிங்கர் பட்டம் செந்தில் கணேஷுக்கு கிடைத்தது. தற்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ள இவர்களுக்கு பாடும் வாய்ப்பு குவிந்து வருகிறது.
சார்லி சாப்ளின் படத்தில் இவர்கள் இருவரும் இணைத்து பாடிய சின்ன மச்சான் பாடல் செம ஹிட். இந்நிலையில் செந்திலுக்கு மேலும் லக் ஒன்று அடித்துள்ளது, அதாவது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் அவரின் அறிமுக பாடலை செந்தில் பாடியுள்ளாராம்.