மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளியான 15 நிமிடங்களில்... 3.5 லட்சமா.? பட்டாசாய் வெடிக்கும் ஜெயிலர் ட்ரெய்லர்.!.. சூப்பர் ஸ்டார் மரண மாஸ்.!:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜெய்லர். இந்தத் திரைப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் கன்னட சினிமாவின் நட்சத்திரம் சிவராஜ் குமார் மற்றும் பாலிவுட்டின் ஜாக்கி ஷரப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து பான் இந்தியா சினிமாவாக இது உருவாகி இருக்கிறது.
வருகின்ற பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது.
இந்நிலையில் அனைத்து சினிமா ரசிகர்களும் திரையுலகத்தினரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயிலர் திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரக்டர் பெயரும் வெளியிடப்பட்டிருக்கிறது .
Inimel pechu illa.., Veechu-dhan🗡️ 1M+ real-time views for #JailerShowcase in just 30 Mins💥
— Sun Pictures (@sunpictures) August 2, 2023
▶ https://t.co/Rd2RKqfd28@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/YfgYLw0UH2
இன்று 6:00 மணிக்கு வெளியான இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரில் முத்துவேல் பாண்டியன் ஆக சூப்பர் ஸ்டார் மரண மாஸ் செய்திருக்கிறார். இந்த ட்ரெய்லரானது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் . வெளியான 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே மூன்றரை லட்சம் பார்வையாளர்களை கடந்திருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் டிரைலர்.