கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
திட்டமிட்டதை விட 15 நாள்களுக்கு முன்னதாகவே முடிவடைந்துள்ளது-'பேட்ட' படம் .
2.0 படத்துக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் கைகோத்துள்ள படம், `பேட்ட'. ரஜினியின் 165-வது படமான இப்படத்தில், விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்கி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், இயக்குநர் மகேந்திரன், சசிகுமார் என பெரும் பட்டாளமே நடித்துள்ளதால், இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
`சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், `பேட்ட' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ``பேட்ட படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்தை விட 15 நாள்களுக்கு முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது. `சன் பிக்சர்ஸ்' , கார்த்திக் சுப்புராஜ், ஒளிப்பதிவாளர் திரு உள்ளிட்ட படக் குழுவுக்கு நன்றி. அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த ட்விட்டுக்கு கார்த்திக் சுப்புராஜ் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக அவர்,``நன்றி தலைவா! என் வாழ்வில் மறக்க முடியாத நாள்கள் அவை. என் கனவு நனவாகியுள்ளது. பேட்ட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. படக்குழுவுக்கு நன்றி. தலைவர் படத்தை நான் இயக்கினேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை.
கனவுபோல் இருக்கிறது'' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் டீசரை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.