திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: ஜெய் பீம் இயக்குனருடன் கைகோர்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!
தமிழ் திரைப்படங்களை தயாரித்து வழங்கும் லைக்கா குடும்பத்தின் தலைவராக இருக்கும் சுபாஷ் கரணின் இன்றைய பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவரின் 170-வது திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ''லைக்கா குடும்பத் தலைவர் சுபாஸ்கரன் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 170-வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
லைக்கா ப்ரொடக்சன் நிறுவனத்தின் மற்றொரு பெருமை மிகுந்த தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பணிகள் இனிதே ஆரம்பமாகிறது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், சுபாஸ்கரன் தயாரிப்பில், தலைமை பொறுப்பாளர் வி.கே.எம் தமிழ்குமரன் தலைமையில் சூப்பர்ஸ்டாரின் 170-வது திரைப்படம் 2024-ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைக்கா ப்ரொடக்ஷன் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம். நன்றி".