மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சூப்பர் ஸ்டார்னா சும்மாவா..." ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள்.. இணையதளத்தில் வெளியான புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெய்லர் திரைப்படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தனது 170 வது திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வாறு தொடர்ச்சியான திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று உலக அளவில் வெளியாக இருக்கிறது. அண்ணாத்த திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த் தன்னுடைய நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய வெற்றி இயக்குனர் ஞானவேல் இயக்க இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்தை பற்றிய ஆச்சரியமான புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.
80 மற்றும் 90களை சார்ந்த பிரபலமான கதாநாயகிகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படத்தை ரசிகர்களும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அந்தக் காலகட்டத்தைச் சார்ந்த முக்கிய கதாநாயகிகளுடன் ரஜினிகாந்த் நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்.