மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஆண்டனி... மார்க் ஆண்டனி" விஷால் மற்றும் எஸ்.ஜேசூர்யா கூட்டணியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்.!
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்தத் திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தத் திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா உடன் இயக்குனர் செல்வராகவன், ரித்து வர்மா ஒய்ஜி.மகேந்திரன் மற்றும் நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை வினோத் குமார் என்பவர் தயாரித்திருக்கிறார்.
விஷால் நடித்த சில திரைப்படங்கள் பெருமளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எஸ் .ஜே சூர்யா வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த பொம்மை என்ற திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனால் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
#MarkAntony Vinayagar chaturthi release da mamae @iam_SJSuryah Naa Ready Dha Varava?? pic.twitter.com/5NjfKawLLZ
— Vishal (@VishalKOfficial) July 4, 2023
மேலும் இது இரண்டு கேங்ஸ்டர் பற்றிய கதை என்பதால் விறுவிறுப்பான பின்னணியுடன் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதியை தொடக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அந்த அறிவிப்பின்படி மார்க் ஆண்டனி திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகும் என்று இந்த திரைப்படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் இத்திரைப்படத்தினை பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.