திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கெத்தான புகைப்படம்.. ஆச்சர்யமடைந்த ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 80களின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார்.
மேலும் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த் தனது நடிப்பு திறமையின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவர் நடிக்கும் ஸ்டைலுக்காகவே இன்றுவரை பல ரசிகர் கூட்டங்கள் பெருகி உள்ளது.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ஜெய்லர், லால் சலாம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் வரும் 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தருவாயில் விரைவில் திரைப்படம் திரையிடப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் கார் ஒன்றின் முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படம் வெளியாகி ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.