தமிழ் சினிமாவிலும் குரூப்பிஸம்; விரைவில் சிலரது முகத்திரைகள் கிழியும்; மாநாடு பட தயாரிப்பாளர் ஆவேசம்.!



Suresh kamatchi about group ism in tamil cinema

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் இந்திய சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அவருடைய ரசிகர்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியது. அவர் மறைந்து ஒரு மாதங்களையும் கடந்த பிறகும் அவரது மரணத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன அதில் முக்கியத்துவம் பெற்றது குரூப்பிஸம்.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானும் நல்ல இந்தி பட வாய்ப்புகளை பாலிவுட்டில் சிலர் தடுப்பதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் சில பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

நடிகர் பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு, தமிழ் சினிமாவிலும் நிபோட்டிசம் உள்ளது என்று கூறினார். மேலும் நாம் யாருடன் பணியாற்ற வேண்டும் நம்முடன் யார் பணியாற்ற வேண்டும் என்பதை தீர்மானிக்க குரூபிசமும் உள்ளது என்று தெரிவித்தார். வாரிசு நடிகரான சாந்தனுவே இவ்வாறு கூறியது பெரிதாக பேசப்பட்டது.

Groupism

மேலும் ஒளிப்பதிவாளர், இயக்குனர், சிறந்த நடிகர் என பன்முக திறமை கொண்ட நட்டி என்ற நட்ராஜூம், தமிழ் சினிமாவுல நிபோட்டிசம் இருக்கா இல்லையானு தெரியல ஆனா குரூபிசம் இருக்குனு சொன்னார். யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ முடிவு பண்றாங்க... யாருங்க நீங்கனு???  கேட்டிருந்தார்.


இதனை தொடர்ந்து தற்போது மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருக்கும் குரூபிசம் பற்றி பேசியிருக்கிறார். இது பற்றி அவருடைய ட்வீட்டர் பதிவில்,  

பாலிவுட்டில்‌ மட்டுமல்ல குரூபிசம் தமிழிலும் உள்ளது. நடிகர்களிடம்‌ உள்ளதோ இல்லையோ ஒருசில தயாரிப்பாளர்களிடம்‌ உள்ளது. அவர்களால் தான்‌ மிகப்‌ பழமையான தயாரிப்பாளர்களும்‌ ஒதுங்கியிருக்கிறார்கள். தான்‌ மட்டுமே வாழவேண்டும்‌ என நினைக்கும்‌ அந்த பிரபல தயாரிப்பாளர்‌ தன்‌ பலத்தால்‌ சில பல தயாரிப்பாளர்களை உடன்‌ சேர்ந்து கொண்டு பலரை வாழவிடாமல்‌ கெடுத்துக் கொண்டிருக்கிறார்‌.

ஃபைனான்சியர்களை கலைத்துவிடுவதும்‌, ஹீரோக்களுக்கு போன்‌ பண்ணி கெடுத்து விடுவதும்‌, படத்தைப்‌ பற்றி கேவலமாக கிளப்பிவிட்டு விநியோகஸ்தர்களிடம்‌ பீதியை உருவாக்குவதுமாக முன்னால்‌ விட்டு பின்னால்‌ செய்யும்‌ வேலையை வெற்றிகரமாக செய்து வருகிறார்‌. அதற்கு சில தயாரிப்பாளர்கள்‌ உடன்‌ பட்டு நிற்பது தான்‌ வேதனை. வெகுவிரைவில்‌ முகத்திரைகள்‌ கிழியும்‌. அதற்கிடையில்‌ பாலிவுட்‌ போல யாரும்‌ தற்கொலை அது இதுன்னு இறங்கிவிடக்கூடாது. ‌ விரைவில் குரூபிசம் ஒழிக்கப்பட வேண்டும்‌ என்று கூறினார்.