திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாநாடு படத்தால் லாபம் இல்லை! சிம்புதான் காரணமா?? தயாரிப்பாளர் வெளியிட்ட பகீர் தகவல்!!
நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்த திரைப்படம் மாநாடு. இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.வில்லனாக எஸ்.ஜே சூர்யா அசத்தியுள்ளார். மேலும் அவர்களுடன் மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். மாநாடு திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது. மேலும் இதற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக் கூறி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தால் தான் லாபம் அடையவில்லை என கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, மாநாடு படத்தை வாங்கிய தியேட்டரிக்கல், சேட்டிலைட், டிஜிட்டல் என அனைவருமே லாபம் அடைந்துள்ளனர். ஆனால் தயாரிப்பாளரான எனக்கு லாபம் இல்லை. அதற்கு காரணம் சிம்புவின் முந்தைய படங்கள்தான். அவை பெருமளவில் வெற்றியடைந்திருந்தால் எனக்கு லாபம் கிடைத்திருக்கும். இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. மாநாடு படத்திற்குப் பிறகு வரும் சிம்புவின் அடுத்த படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு நல்ல லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.