ஏழு ஆண்டுகள் கழித்து நண்பனை பார்க்க சென்ற நடிகர் சூரிக்கு ஏற்ப்பட்ட ஏமாற்றம்! வைரலாகும் புகைப்படம்.
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக மாறிவிட்டார் நடிகர் சூரி. விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் மிக பெரிய நடிகர்களின் படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துவிட்டார் சூரி.
படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.வெண்ணிலா கபடி குழு படத்தில் வரும் பரோட்டா சீன் இன்றுவரை பிரபலமாக உள்ளது. இந்த ஒரு காட்சிதான் இன்று இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
இந்நிலையில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையில் சென்னை வந்த சூரி பின்னர் ஏழு ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். அப்போது தனது நண்பரிடம் தனது மற்றொரு நண்பரான திவாகர் என்பவரை பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார் அவரது நண்பர். இந்நிகழ்வு நடிகர் சூரியிடையே மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது. தற்போது அவரின் நண்பர் புகைப்படத்தை சூரி தனது ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார்.