#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சூர்யாவுடன் இணையும் 2 முக்கிய பிரபலங்கள், யார் யார் தெரியுமா? - வெளியான புதிய தகவல்.
நடிகர் சூர்யாவின் NGK படம் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து காப்பான் படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.இதனை இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கி வருகிறார்.
’அயன்’, ‘மாற்றான்’ ஆகியப் படங்களை தொடர்ந்து சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் மோகன்லால் சாயிஷா, ஆர்யா, சமுத்திரக்கனி மற்றும் பொம்மன் இரானி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ’காப்பான்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இதன் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த வாரம் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இதன் சேட்டிலைட் உரிமையை சன் டி.வி நிறுவனம் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
காப்பான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துக் கொள்வதையும், தயாரிப்பு நிறுவனமான லைகா தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
#KaappaanAudioLaunch on 21st July2019 6pm onwards🔥. Guests of Honour 😎SuperStar @rajinikanth 🎬AceDirector @shankarshanmugh ✍️ @vairamuthu 🎼 @Jharrisjayaraj @Suriya_offl @Mohanlal @arya_offl @bomanirani @sayyeshaa @SonyMusicSouth pic.twitter.com/bMQr2QfWTU
— Lyca Productions (@LycaProductions) July 17, 2019