#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் அந்த பிரபல இயக்குனர் இயக்கத்தில் சூர்யா: உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.
தொடர்ந்து தோல்விப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்த நடிகர் சூர்யா சமீபத்தில் வெளியான காப்பான் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் சூர்யா அடுத்தாக யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், சிவா சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்க போவதாக அறிவிப்புகள் வெளியானதை அடுத்து தற்போது சூர்யா இயக்குனர் ஹரியுடன் இணைய உள்ளாராம். ஹரியா? அப்போ சிங்கம் 4 ஆ? என கேள்விகள் எழுந்ததை அடுத்து இல்லை இல்லை, இது புது கதை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஹரி - சூர்யா இணைந்து ஆறு, வேல், சிங்கம் சீரிஸ் என ஐந்து வெற்றி படங்களை கொடுத்ததை அடுத்து மீண்டும் ஆறாவது முறையாக கூட்டணி சேர்ந்திருப்பது சூர்யா ரசிகர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கூட்டணிக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவராத நிலையில் அதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.